மிருசுவில் பேருந்து சேவையை எழுதுமட்டுவாழ்வரை நீடிக்கவும் – பாடசாலைச் சமூகம் கோரிக்கை!

Friday, May 11th, 2018

யாழ்ப்பாணத்திலிருந்து மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத்திட்ட துர்க்கை அம்பாள் ஆலயம்வரை தினமும் நடத்தப்படும் பேருந்து சேவையை அங்கிருந்து சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்தில் உள்ள எழுதுமட்டுவாழ் வடக்கு அ.த.க. பாடசாலை வரை நீடிக்குமாறு பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இ.போ.ச வின் யாழ்ப்பாண சாலை முகாமையாளரைக் கோரியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமும் யாழ்ப்பாணத்திலிருந்து மிருசுவில் துர்க்கை அம்பாள் ஆலயம்வரை இ.போ.ச பேருந்து சேவைகள் நடத்தப்படுகின்றன.

இந்தப் பேருந்தில் பயணிக்கும் எழுதுமட்டுவாழ் வடக்கு அ.த.க பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் ஆலயத்துக்கு முன்பாக இறங்கி ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பாடசாலைக்கு நடந்து செல்கின்றனர்.

பாடசாலை முடிந்துவரும் போதும் நடந்துவந்து பேருந்தில் பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே துர்க்கை அம்பாள் ஆலயம்வரை காலையிலும் பிற்பகலிலும் இடம்பெறும் பேருந்து சேவையை பாடசாலை வரை நடத்துங்கள் என்று அவர்கள் கோரியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: