நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 584 பேருக்குக் கொரோனா தொற்று – 1325 மரணங்களும் பதிவு – சுகாதார அமைச்சு தகவல்!

Friday, May 28th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டாயிரத்து 584 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 12 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 861ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 411 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 789 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே 29 ஆயிரத்து 774 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 14 இலட்சத்து 61 ஆயிரத்து 696 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை மூன்று இலட்சத்து 43ஆயிரத்து 976பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: