மின் துண்டிப்பிற்கு சதிவேலையா காரணம்? – மின்சாரசபையின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு!

Wednesday, December 1st, 2021

கடந்த 29ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட மின் துண்டிப்பிற்கு சதி முயற்சிகள் காரணமாகயிருக்கலாம் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்எம்சி பெர்டிணான்டோ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சதிமுயற்சி இடம்பெற்றதா என விசாரணைகள் இடம்பெறும் அதேவேளை இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சாரசபைக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ள பலர் மின்துண்டிப்பு குறித்து கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரசபை ஊழியர்களே இதற்கு காரணம் என சிலர் முறைப்பாடு செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இது வழமையான விடயம் என சிலர் தெரிவித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது பாரதூரமான விடயம் இது குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என பொதுமக்கள் ஊழியர்கள் அதிகாரிகள் என பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சாரசபையின் தலைவர் என்ற வகையில் எனக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் இல்லை இதனால் நான் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: