பெண் தலைமைக் குடும்ப மாணவர் விலகலே அதிகம்  – புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது!

Friday, October 28th, 2016

“புதுக்குடியிருப்பில் பாடசாலைக்குத் தொடாச்சியாக வராத மாணவர்களை மீள இணைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது, மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை உடனடியாகப் பாடசாலைகளில் இணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.”

புதுக்குடியிருப்பில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த, பணிப்பெண் வேலைக்காகச் சென்ற பெண்களின் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களே பாடசாலை செல்லாத மாணவர்களாக அதிகம் இணங்காணப்பட்டனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், பொலிஸ் திணைக்களம், அரச சார்பற்ற  நிறுவனப் பிரதிநிதிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டது.

புதுக்குடியிருப்பில் பாடசாலைக்குத் தொடர்ச்சியாக வராத மாணவர்களை மீள இணைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை உடனடியாகப் பாடசாலைகளில் இணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. அதன்போது கணவனை இழந்த அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் குடும்பங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற பெண்களின் பிள்ளைகளே அதிகம் பாடசாலையில் இருந்து இடை விலகியவர்களாகக் காணப்பட்டனர். இரு குடும்பங்களில் 6 பிள்ளைகள் பாடசாலை செல்லாது இருப்பதும், ஒரு பாடசாலையில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ச்சியாக வரவு குறைவாக உள்ளமையும் இதன்போது இனங்காணப்பட்டது. நாளாந்தம் கூலி வேலை செய்வதும், அதற்காகச் சிலர் பிள்ளைகளை அழைத்துச் செல்வதும், சிலர் மூத்த பிள்ளையை வீட்டில் விட்டு வேலைக்குச் செல்வதும் இதற்கான முக்கிய காரணங்களாகக் காணப்பட்டன.

பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தராத மணவர்கள், இடை விலகுகின்ற மாணவர்கள் தொடர்பான விவரங்கள் அதிபர்கள், கிராம சேவகர்கள் ஊடாகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மாணவர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களை மீண்டும் பாடசாலையில் இணைந்து கல்வியைத் தொடர வழியேற்படுத்தப்படுகின்றது. இது தொடர்பாக தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டுள்ளோம் – என்று முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்த் தெரிவித்துள்ளார்.

DSC7874

Related posts: