மின் தடை அறிவித்தல்!

Sunday, November 26th, 2017

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களிலும் கிளிநொச்சியின் சில பிரதேசங்களிலும் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சாரசபையின் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

நாளை ஞாயிற்றக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை பூதர்மடம், கோப்பாய் சந்தி, இருபாலை, வட்டக்குளம், கட்டைப்பிராய், கல்வியங்காடு, ஆடியபாதம் வீதி, நாயன்மார்கட்டு இராமலிங்கம் சந்தி, கோப்பாய் பொலிஸ், பாற்பண்ணை திருநெல்வேலி GPS றோட், திருநெல்வேலி சந்தை, கலாசாலைவீதி, இராமலிங்கம் சந்தியிலிருந்து முடமாவடி கிளிகடைவரை, பூங்கனிச்சோலை, வேலணைச் சந்தியிலிருந்து துறையூர் வரை, மடத்துவெளி, வல்லான், ஆலடிசந்தி, புங்குடுதீவு, இறுப்பிட்டி, குறிகட்டுவான், ஆஸ்பத்திரி வீதியில் காரைநகர் வீதி சந்தியிலிருந்து கே.கே.எஸ் வீதி சந்தி வரை, சீனிவாசகம் வீதி, சிவன்பண்ணை வீதியின் ஒரு பகுதி, கே.கே.எஸ் வீதி துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து சத்திரத்துச் சந்தி வரை, சப்பல் வீதி, யாழ் 1 ஆம், 2 ஆம், 3 ஆம், 4 ஆம் குறுக்குத் தெருக்கள் வேம்படிவீதி சந்தி வரை, பிரதான வீதியில் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து விஜிதா கபே வரை யாழ்.பொலிஸ் நிலையம், இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், யாழ்.பொது நூலகம், மாவட்ட நீதிமன்றக் கட்டடத்தொகுதி, தேசிய நீர் வழங்கல் வடிகால் சபையின் பிராந்திய முகாமையாளர் அலுவலகம், STS கண் வைத்தியசாலை, புங்குடுதீவு கடற்படைமுகாம் ஆகிய இடங்களிலும் –

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை கிளிநொச்சிப் பிரதேசங்களில் அம்பலப்பெருமாள், கோட்டைகட்டி ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Related posts: