மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி உயிரிழப்பு!

Thursday, September 2nd, 2021

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்னல் தாக்கியதில் 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி, நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

சம்பவத்தில் அச்சுவேலி வடக்கை சொந்த இடமாகவும் உடுப்பிட்டியை வதிவிடாகவும் கொண்ட 41 வயதுடைய தியாகராஜா மதனபாலன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

வயலில் உழவில் ஈடுபட்ட போது சம்பவம் இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்

உயிரிழந்தவரின் சடலம் தற்போது அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் இறப்பு தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மற்றும் அப்பகுதி சுகாதாரப் பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: