மின்சார ரயில் பாதைக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

Thursday, December 13th, 2018

இரு தூண்கள் இடையே ஓடும் மின்சார ரயில் சேவைக்கான ரயில் பாதையினை கொழும்பு கோட்டை முதல் கொட்டாவ, மாலபல்ல வரையில் நிர்மாணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ள குறித்த மின்சார ரயில் சேவை பாதைக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 2022ம் ஆண்டில் பூர்த்தியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related posts: