மின்சார சபை ஊழியர்களுடன் பொறியியலாளர்களும் இணைவு!

Monday, September 18th, 2017

மின்சார சபை ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் கடந்த 13ஆம் திகதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.எனினும் மின்சார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் போன்றோர் இன்று வரை வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் மின்வழங்கல் நடவடிக்கைகளை சீராக மேற்கொள்ள உதவி செய்திருந்தனர்.

இந்த நிலையில் நாளை நள்ளிரவு தொடக்கம் பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் தொழிற்சங்கமும் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.இதன் காரணமாக நாளை தொடக்கம் மின்விநியோக நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகின்றது

Related posts: