மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான வரைவை இறுதி செய்ய சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, March 13th, 2024

ன்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான வரைவை விரைவாக இறுதி செய்வதற்கு  சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடி வருவதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரிடமிருந்து தெளிவுபடுத்தல்கள் மற்றும் வரைவுக்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரம் என்பன கிடைத்த பின்னர் அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளமை குபறிப்பிடத்தக்கது

000

Related posts: