மின்சாரத் தடைக்கான காரணத்தை ஆராய அமைச்சர்கள் அடங்கிய குழு நியமனம்!

மின்சாரத் தடை தொடர்பிலான பிரச்சினைகளை ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, நேற்றுக் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த குழு நியமிக்கப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தகுழுவில் அமைச்சர்களாக ரவி கருணாநாயக்க, கபீர் ஹாசீம் மற்றும் ஹர்ச டி சில்வா ஆகியோர் அடங்குகின்றனர்.
இலங்கை மின்சார சபை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கிடையில் நிலவும் முறுகல் நிலையே இந்த நிலைமைக்கான காரணம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Related posts:
கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு!
கடமை நேரத்தில் அரச ஊழியர்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் விசேட சுற்றுநிருபம் வெளியானது!
அரச நிறுவன பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிக்க பெப்ரவரி 10 ஆம் திகதிவரை அவகாசம்!
|
|