மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை! – இலங்கை மின்சார சபை!

Monday, October 10th, 2016

நாட்டு மக்கள் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நீர் மின் உற்பத்தியின் அளவு மிகவும் குறைவடைந்து வருவதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையே இதற்கான பிரதான காரணம் எனவும் மின்சாரசபை கூறியுள்ளது.

இதனால், நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து வருவதாகவும் மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் நீரை சிக்கனமாக பாவிக்காவிடின் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்றும் மின்சார சபை அறிவித்துள்ளது.

மேலும் மின் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்து வரும் காரணத்தினால், பொதுமக்களை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுப்பதாக மின் சக்தி மற்றும் மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.எனினும் குறித்த காலநிலை தொடர்ந்தாலும் நாட்டில் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

blogger-image--1612070024

Related posts: