மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதி – இராணுவ தளபதி தெரிவிப்பு!
Friday, October 16th, 2020
மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 61 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களில் 3 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த நிலையிலும், ஏனைய 58 பேரும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 850 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 05 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் அதிரடியாக பதவி நீக்கம்
இடைக்கால கணக்கறிக்கை நாளை - அகில விராஜ் காரியவசம்!
கடந்த ஆண்டு இலங்கைக்கு மில்லியன் டொலருக்கும் அதிகமான புதிய உதவிகளை அமெரிக்கா வழங்கியதாக இலங்கைக்கான ...
|
|
|


