மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை – தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவிப்பு!

Wednesday, November 8th, 2023

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 வருடங்கள் முடிவதற்குள் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் அங்கவீனர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாகவும்,

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தேர்தல்கள் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னோடி திட்டம் தொடர்பாக 10 மாவட்டங்களில் இருந்து 500 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இந்த ஆண்டு 5000 பேருக்கு அடையாள அட்டை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: