மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 46,000 க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Friday, September 15th, 2023

செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 46,000 க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையில் மொத்தமாக 46 ஆயிரத்து 308 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அதிகார சபையின் தரவுகள் காட்டுகின்றன.

இதற்கமைய, இந்த வருடத்தில் இதுவரையில் நாட்டை வந்தடைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தில் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரத்து 201 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கில் இதுவரையில் 39 சதவீதத்தை இலங்கை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: