மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து சேவையை வழங்க துரித நடவடிக்கை – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Monday, January 11th, 2021

பாடசாலை மாணவர்களுக்கான அதிகபட்ச போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக 1500 சிசு செரிய பேருந்துகள் போக்குவரத்திற்கு சேவைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லையென்றால் டிப்போ முகாமையாளர்களைத் தொடர்புகொண்டு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கு வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்

Related posts: