மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு துறைசார் அமைச்சு பணிப்பு!

Wednesday, June 14th, 2023

மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்குபுர இன்று தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடனான சந்திப்பின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: