மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாளை யாழ்ப்பாணம் வருகை!

Friday, October 20th, 2023

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நாளை சனிக்கிழமை (21) விஜயம் செய்யவுள்ளனர்.

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவரின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு நாளை(21) மற்றும் நாளைமறுநாள் (22) என இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு தாம் செல்லும் முதல் பயணமாக இது அமைவதாகவும், இரண்டு நாட்களும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றி பார்வையிட்டு மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு செல்லவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: