பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை உறுதியாக உள்ளது – வெளிவிவகார அமைச்சர்!

Wednesday, March 1st, 2017

நாட்டில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் உறுதியாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 34வது அமர்வில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இணைப் பங்காளர்களாக நாம் இணைந்து கொண்டு சுமார் ஒரு வருடங்களுக்கு மேற்பட்டுள்ள அல்லது 15 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்று நான் உரையாற்றுகிறேன்.

சிலர் எமது அந்த செயற்பாட்டை நாட்டுக்கு செய்த காட்டிக் கொடுத்தல் மற்றும் துரோகமாக விமர்சித்து வருகின்றனர்.

1948ஆம் ஆண்டு சுதந்திரத்தினைப் பெற நாம் அனைவரும் ஜாதி, மத, இன பேதங்களின்றி ஒன்றாக பணியாற்றி வெற்றி பெற்றோம். ஆனாலும் அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் நாட்டை கட்டியெழுப்பத் தவறியமையால் கடந்த 69 வருடங்கள் வலிகள், வன்முறைகளுடன் பயணித்தோம், விலைமதிப்பற்ற மனித வளங்கள் வாழ்க்கை என்பவற்றையும் இழந்தோம்.

அந்த சகாப்தம் தற்போது நிறைவடைய வேண்டும். இலங்கையை நீதியான ஆட்சியை கட்டியெழுப்ப கோருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், தான் 2016ம் ஆண்டு கூட்டத் தொடரில் கூறியதைப் போன்று, சுமார் 5,515.98 ஏக்கர் அரச காணிகள் மற்றும் 2,090.03 ஏக்கர் தனியார் காணிகள் 2016ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 1,383.51 அரச காணிகள் 30.54 ஏக்கர் தனியார் காணிகள் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நல்லிணக்க வழிமுறைகள் பற்றிய கலந்தாய்வுச் செயலணி பாதிக்கப்பட்ட சுமார் 7000 பேரின் கருத்துக்களை எழுத்து மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இந்த அறிக்கை தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

350191567mangala_samaraweera

Related posts: