மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் உதவிப்பொருட்கள் வழங்கிவைப்பு!

Tuesday, November 22nd, 2016

தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக பாதிக்கப்பட்ட கோப்பாய் அம்மன் கோவிலடியை சேர்ந்த 17 குடும்பங்களிற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (21) குறித்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிப்படைந்த மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரன் பாதிக்கப்பட்ட மக்களது நிலமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டதுடன், அவர்களுக்கு உடடினத் தேவையான உலர் உணவுப் பொருட்களையம் வழங்கி வைதுள்ளார்.

இதன்போது கட்சியின் கோப்பாய் மத்தி வட்டார உபசெயலாளா் கந்தசாமி சிவயோகன் கட்சியின் புத்தூர் மேற்கு வட்டார செயலாளா் ஆறுமுகசிவம் அரவிந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed (5) unnamed (6)

unnamed (1)

unnamed (2)

unnamed (3)

unnamed (4)

Related posts: