மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக் இலங்கை வருகை!

Friday, December 16th, 2016

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக் அடுத்தவருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு வரவுள்ளர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மலேஷிய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது இலங்கைக்கும்  மலேஷியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.   இந்த தகவலை வெளிவிவாகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று மலேஷியாவில் வைத்து தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது இலங்கையானது அனைத்து நாடுகளுடனும்  பாரிய உறவை வலுப்படுத்திவருகின்றது. தற்போது ஜனாதிபதி  மலேஷியாவுக்கு வருகை தந்துள்ளார். அதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் மலேஷிய பிரதமர் இலங்கை வருகின்றார். அதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவோம் என்றார்.

மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மலேஷியாவுக்கு  சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

asdsf2

Related posts: