மறைந்த பாரம்பரிய சித்த வைத்தியர் தம்பிப்பிள்ளை சிங்க அரியரட்ணத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை !
Monday, January 25th, 2021மறைந்த பாரம்பரிய சித்த வைத்தியர் தம்பிப்பிள்ளை சிங்கஅரியரட்ணம் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
அன்னார் வயது மூப்பின் காரணமாககாரணமாக அமரர் தம்பிப்பிள்ளை சிங்கஅரியரட்ணம் நேற்றையறையதினம் (24.01.2021 } காலமானார்.
இன்நிலையில் வட்டுக்கோட்டடை சங்கரத்தையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்றிருந்த அமைச்சசர் டக்ளஸ் தேவானந்தா அன்னாரின் பூதவுடலுக்கு தமது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் காலஞ்சென்ற அமரர் தம்பிப்பிள்ளை சிங்கஅரியரட்ணம் அவர்களின் பூதவுடலுக்கு தாமது இறுதி அஞ்சலிமரியாதையை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 18 ஆம் திகதி இறைபதமடைந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளருமான தோழர் வசந்தன் ( மாமா ) அவர்களின் தாயார் அமரர் புதன் அன்னம்மாவின் இல்லத்திற்கு சென்றிருந்த அமைச்சர் அமைச்சர் அன்னாரது குடம்பத்தினருக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தாமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|