மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு யாழிழ்ப்பாணத்தில் பலரும் அஞ்சலி மரியாதை!

Thursday, April 1st, 2021

மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிற்றாலயத்தில் அரசியல் பிரமுகர்கள் மதகுருமார் சமூக ஆர்வலர்கள் என பலரும் மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

யாழ் மறைமாவட்ட ஆயர்,குருமுதல்வர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று திருவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது யாழ் மறை மாவட்டத்தைச் சேர்ந்த குருக்கள், அருட் சகோதரிகள் அஞ்சலி செலுத்தினர்.

மன்னார் ஆயரின் இறுதி திருப்பலி திங்கள் மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளது

இந்நிலையில் அவரின் திருவுடல் யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக நாளை காலை 11 மணி வரை வைக்கப்பட்டு பின்னர் நாளை மதியம் மன்னருக்கு அவரது திருவுடல் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை அவரது இறுதி திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: