மருந்து கையிருப்பபை கணனிமயப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் ராஜித!

Monday, October 8th, 2018

வைத்தியசாலைகளில் மருந்து கையிருப்புத் தொடர்பான தகவல்கள் கணனிமயப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகல மக்களுக்கும் சமமான அளவில் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி மருந்தை விநியோகிப்பது இதன் நோக்கமாகும். மேலும், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் உடனடியாக வைத்திய சேவைப் பிரிவுக்கு அறிவிப்பதுடன் ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து மருந்து வகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் இதன் மூலம் வசதி கிட்டுகின்றது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபைகளில் உள்ள வைத்தியசாலைகளிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.