மருந்துகள் கொள்வனவுக்காக மேலதிகமாக 100 மில்லியன் டொலர் – அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, September 13th, 2022

மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் டொலர்களை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சராவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த நிதி மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: