மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கான பொறிமுறை இன்று வெளியீடு!

Friday, September 23rd, 2016

மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கான வழிமுறை இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நடைபெறவுள்ள சேனக பிபிலே ஞாபகார்த்த நிகழ்வில் மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கான வழிமுறை வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 30 க்கும் மேற்பட்ட மருந்து வகைகளின் விலைகள் குறைவடையும் என பேருவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன் பிரகாரம் பேராசிரியர் சேனக பிபிலே கொள்கை இன்று முதல் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

rajitha-1

Related posts: