மருந்தக உரிமையாளர்களுக்கு சுகாதார அமைச்சரால் ஓர் எச்சரிக்கை!

Thursday, May 2nd, 2019

மருந்தகங்களில் மருந்துகளைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு அதற்குரிய பற்றுச்சீட்டுகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் மருந்துகளைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு அதற்குரிய பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதில்லையென குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆகவே மருந்தகங்களில் பரிசோதிக்கும் போது மருந்துகளின் காலாவதித் திகதி, உற்பத்தித் திகதி, விலைகள் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறும் தேசிய மருந்துக் கூட்டுத்தாபனத்துக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இவ்விடயம் உள்வாங்கப்பட்டு வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய மருந்துக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்திலும் பற்றுச்சீட்டு வழங்குவது கட்டாயமென வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
மாணவர்கள் உயிரிழப்பு: நீதவான் உத்தரவின் பிரதியை மனுதாரருக்கு வழங்குமாறு உத்தரவு
பிரபல சட்டத்தரணி செலஸ்ரின் ஸ்ரனிஸ்லஸ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைவு!
வாடிகளிற்கு தீ வைப்பு : 35 லட்சம் நட்டம்!
சுகாதாரப்பணி உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு!