மருத்துவ பீடங்களின் கற்றல் செயற்பாடுகள் ஐந்து மாதங்களாக தடை!

Tuesday, June 27th, 2017

 

இலங்கையிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் மருத்துவ பீடங்களின் கற்றல் செயற்பாடு ஐந்து மாதங்களாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் மருத்துவ கல்லூரியை இரத்து செய்யுமாறு கோரி மாணவர்கள் விரிவுரைகளில் கலந்து கொள்ளாமையே இதற்கு காரணமாகும்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் எட்டு மருத்துவ பீடங்களில் ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

ஜனவரி 31 ஆம் திகதியிலிருந்து விரிவுரைகளில் பங்கேற்காத மாணவர்கள் சில பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அட்டாளைகளில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் மாணவர்களிடம் நாம் வினவுவதற்கு முயற்சித்த போது மாணவ சங்க தலைவர்கள் அதுகுறித்த கருத்து வெளியிடுவார்கள் என கூறப்பட்டது.

விரிவுரையாளர்கள் உரிய நேரத்திற்கு பல்கலைக்கழங்களில் கடமையில் ஈடுபட்டாலும் மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணிப்பதாக பல்கலைக்கழக நிர்வாகங்கள் கூறுகின்றன. எனினும் இது தொடர்பில் பகிரங்கமாக கருத்து வெளியிட அவர்கள் மறுத்தனர்.

Related posts: