மருத்துவ துறைசார் 14 தொழிற்சங்கங்கள் இன்றுமுதல் தொடர் பணிப்புறக்கணிப்பு!

Monday, July 5th, 2021

பதவி உயர்வு உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட மருத்துவ துறைசார் 14 தொழிற்சங்கங்கள் இன்றுமுதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (05) காலை 8 மணிமுதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், தெரிவுசெய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில், அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: