மருத்துவதுறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்க கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதில் விதிவிலக்கு – வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் சுற்றுநிருபம் வெளியீடு!

Sunday, August 16th, 2020

வடக்கு மாகாண சபையின் மூன்று பிரிவுகளில் உள்ளடங்குவோர் கைவிரல்  அடையாளத்தை பதிவு செய்ய தேவை இல்லை என வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

வடக்கு மாகாண சபையின் கீழ் உள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள இலங்கை வைத்திய சேவை (SLMS) இலங்கை தாதியர் சேவை (SLNS) துணை மருத்துவ சேவை (PSM) ஆகிய மருத்துவதுறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தமது இயந்திர கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்

2019/11/11, 2020/4/8, 2020/4/20, மற்றும் 2020/7/21 ஆகிய தினங்களில் செயலாளர்கள் குழு கூட்டங்களில் வடக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களில் கடமையாற்றும் நாடளாவிய சேவை  இணைந்த சேவை  மற்றும் திணைக்கள சேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் வருகை மற்றும் வெளிச் செல்லலுக்கு கைவிரல் அடையாளத்தை உறுதி செய்யும் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும்  எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறித்த சுற்று நிருபத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மருத்துவதுறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தமது இயந்திர கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் எழுத்து மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: