மன்னார் அந்தோனியார்புரம் கிராமம் அழிவடையும் ஆபத்துள்ளதாக சூழலியலாளர்கள் எச்சரிக்கை!

Wednesday, May 10th, 2017

மன்னார் மாந்தைமேற்குப் பகுதியின் அந்தோனியார்புரம் கிராமம் கடல் அரிப்பனால் அழிவடைந்துவிடும் ஆபத்துள்ளதாக சூழலியலாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

குறித்தகிராமத்திற்குள் கடல் அரிப்புஏற்பட்டு,கடல்நீர் உட்புகும் அபாயம் உள்ளதாகவும் இதனைத் தடுத்துநிறுத்துவதற்கு உரியதரப்பினர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடுமென்றும்,அங்குவாழ்ந்துவரும் மக்கள் இவ்வாறான இடர்பாடுகளை எதிர்கொள்வதானது தவிர்க்கமுடியாத தொன்றாகிவிடுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் 170 வரையானகுடும்பங்களைச் சேர்ந்தமக்கள் வாழ்ந்துவருகின்றனர் என்பதுடன், அடிப்படைவசதிகள் கூடஉரியமுறையில் தீர்க்கப்படாதுள்ளதாகவும்,முக்கியமாககுடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும் மக்கள்நெருக்கடிகளைநாள்தோறும் எதிர்நோக்கிவருவதாகவும் தெரியவருகின்றது.

இதுவிடயம் தொடர்பாகஅப்பகுதிமக்கள் பலதடவைகள் முறையிட்டபோதும் இதுவரையில் எவரும் அக்கறைகாட்டமுன்வரவில்லை என்றும், தம்மிடம்  வாக்குகளைஅபகரித்துக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தம்மைதொடர்ச்சியாகஏமாற்றிவருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

Related posts: