மன்னாரில் மோட்டார் சைக்கிள் டிப்பர் கோர விபத்து – அருட்தந்தை டிலான் பலி!

Tuesday, March 5th, 2024

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த 34 வயதான அருட்தந்தை மரிசால் டிலான் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் மன்னார் மடு தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விட்டு நேற்று மாலை திரும்புகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மன்னார் – அடம்பன் பகுதியூடாக அருட்தந்தை டிலான் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதன் போது படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலதிக சிகிசிச்சை வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்து தொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபடுவோரிடம் சிக்க வேண்டாம் - வெளிநாட்டு வேலைவ...
டோக்கன் முறையானது அமைச்சின் தலையீட்டினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்...
வடக்கில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரிப்பு - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பண...