மத்திய வங்கியின் நாணயத்தாள் குறித்த அறிவிப்பு!

Thursday, February 15th, 2018

வங்கிகளில் சேதமடைந்த நாணயத் தாள்களை மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள காலம் மார்ச் மாதம் 31ஆம் திகதி முடிவடையும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாட்டின் நற்பெயரில் நாணயத் தாள்களின் தூய்மை முக்கியமானது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் நாயணத்தாள்கள் சுத்தமில்லாத நிலையில் காணப்படுகின்றன.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் நாணயத்தாள்களின் சுத்தம் பற்றியும் கவனம் செலுத்துகிறார்கள். மக்கள் மத்தியில் நாணயத் தாள்களின் சுத்தம் பற்றி போதிய விளக்கம் இல்லை என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts: