மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு கோரிக்கை!

Wednesday, October 11th, 2017

தீபாவளியன்று பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார்,கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுவரி மற்றும் கலால் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு அவசர தொலைநகலின் மூலம் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். மதுபான விற்பனை நிலையங்களை தீபாவளியன்று மூடிவிடுவதன் மூலம் அப்பண்டிகையை சிறப்புற கொண்டாடுவதற்கு வழியேற்படும் என குறிப்பிட்டுள்ளார்.