மதரஸா பாடசாலை விடயத்தில் தலையிட அரசுக்கு உரிமை உண்டு – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, March 15th, 2021

இனங்களுக்கு இடையிலான பிரிவை ஏற்படுதல், நாட்டின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தல் போன்ற வகையில் நடத்தப்பட்டால் மதரஸா பாடசாலை விடயத்தில் தலையிட அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் –  நாடு முழுவதும் சுமார் ஆயிரத்து 965 மதரஸா பாடசாலைகள் இருப்பதாகவும் எதிர்காலத்தில் இந்த பாடசாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ள கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து சுமார் 600 பேர் இலங்கைக்கு வந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் குறித்த பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கு கடந்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ். பல்கலைக்கழகத்தில் போராடும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் எதிரொலி: கவனயீர்ப்புப் ப...
வானிலை அறிவித்தல்களை தமிழில் வெளியிடுவதற்கு திணைக்களத்தில் தமிழ் அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை!
கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வ...