மண்டைத்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம்!

மண்டைத்தீவு கடலிற்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு நேற்று (10) பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். முல்லைத்தீவில் இருந்து நேற்று முன்தினம்(08) யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் மீன்பிடிக்க வந்துள்ளனர்.
படகில் மீன்பிடிக்கச் சென்ற வேளையில் படகு பழுதமைந்த நிலையில் நடு;க்கடலில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலறிந்து கடலடிக்கு மீனவர்கள் சென்ற வேளையில் அங்கு மீனவர்களை காணவில்லை என்றும் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மீன்பிடிக்கச் சென்ற உறவினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (10) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
Related posts:
கடும் வரட்சி - 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
600 வருடங்கள் பழமையான சீன பொருட்கள் கண்டுபிடிப்பு!
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ கடந்தது!
|
|
ஈ.பி.டி.பியின் எழுக தமிழ் கூட்டுப்பேரணியாளர்கள் மீது தமிழ் மக்கள் பேரவையின் காடையர்கள் அராஜகம்! (காண...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவையின் பெரும்பான்மை...
எதிர்வரும் திங்கள்முதல் சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - இ...