மட்டு.விமான நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

மட்டக்களப்பு விமான நிலையத்தில் 317 கோடி ரூபாய் செலவில் உள்ளுர் விமானப் போக்குவரத்து சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (10) ஆரம்பித்து வைத்துள்ளார்.
சிவில் விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் விதமாக இரண்டு விமான சேவைகள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்புக்கு இடையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர்அஹமட், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதிமைச்சர் எம்.எஸ். அமீரலி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், தவிசாளர், பிரதித் தவிசாளர், ஏயார் மார்ஷல் ஜீ.பி. புளத்சிங்ஹல, உட்பட இன்னும்பல அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடல் 5.6 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு !
டெப் கணனிகளை வழங்குவதற்கான பணிகள் பூர்த்தி!
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிக்க அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டு...
|
|