மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான உறுதுணையாக ஊடகங்களே திகழ வேண்டும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, May 3rd, 2021

உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணி அல்ல என தெரிவித்துள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உண்மையற்ற செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை ஏற்படுத்துவதையும் ஊடகங்களே பொறுப்புடன் தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடு இன்று சந்தித்து நிற்கும் பெரும் சுகாதார நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், அவ்வாறு செயற்படுவதே ஊடகங்களின் பெரும் பொறுப்பாகவும் இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தி – ஒரு நாட்டையும் அதன் மக்களையும் திறம்பட நிர்வகித்துச் செல்வதில் ஓர் அரசாங்கம் சந்திக்கும் சவால்களை விமர்சிப்பது அல்லாமல், மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான உறுதுணையாகவும் ஊடகங்களே திகழ வேண்டும்.

இவைகளே ஊடக சுதந்திரம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச எமது நாட்டில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் உறுதிப்பாட்டோடு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று அனைத்துலக ஊடக சுதந்திர நாள் கொண்டாடப்படும் நிலையில் இதை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: