மக்களுக்கு ஓர் முன்னெச்சரிக்கை!

Tuesday, December 20th, 2016
நாடளாவிய ரீதியில் இடியுடன் கூடிய மழை இன்று பெயக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், வட,கிழக்கு ,மத்திய, வட-மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை இன்று பிற்பகல் பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு,சப்ரகமுவ,மத்திய மற்றும் தென் மகாணங்களில் இன்று காலை பனி மூட்டம் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே குறித்த பகுதிகளில் உள்ள பிரதேசவாசிகளை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இடிமின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

weather alert 6656545

Related posts: