மக்களின் செயற்பாடுகளே யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் –யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா சுட்டிக்காட்டு!

Tuesday, June 15th, 2021

யாழ் மாவட்ட மக்களின் செயற்பாடுகளாலேயே யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று  அதிகரித்ததாக மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா  சுட்டிக்காட்டியுள்ளார்.

நாவற்குழியில் கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் வைபவரீதியாக இன்றையதினம். யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கவென  200 கட்டிகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ள யாழ்.மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்தில் இந்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை ஆரம்பித்துவைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – யாழ்.மாவட்டத்தில் கடந்த காலத்தை விட தற்பொழுது தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது. சில ஆலயங்களில் சுகாதார பிரிவினரின் கட்டுப்பாடுகளை மீறி ஆலய உட்சவங்கள் நடத்தப்பட்டமையாலேயே தொற்றுநிலைமை அதிகரித்தது.

தற்போதும் சில இடங்களில் திருமண நிகழ்வுகள் வீடுகளில் சுகாதார பிரிவின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே இந்த பயணத்தடை என்பது மக்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவே என்பதை மக்கள் புரிந்துகொள்ள வெண்டம் என வலியுறுத்தியிரந்த கட்டளைத் தளபதி பொதுமக்கள் இந்த பயணத்தடைகாலத்திலாவது சுகாதாரப் பிரிவினரின் கட்டுப்பாடுகளுடன் வீடுகளில் இருப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சிகிச்சை நிலையத்தில் 200 கட்டில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் சுகாதார பிரிவினருடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் தொற்றை இல்லாதொழிக்க உதவ முன்வரவண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: