மக்களின் கோரிக்கை செவிசாய்ப்பு – வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க புதிய பேருந்து !
Tuesday, December 26th, 2023யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்துக்கு வசதிகளை செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இன்று புதிய பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
முன்பதாக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்துக்கு வசதிகளை செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 70 கிலோமீற்றர் தூரத்தைக்கொண்ட வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு நோக்கி மாலை 5.15 மணிக்கு நேற்று மாலை சேவையை ஆரம்பித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து கைதடி பகுதியில் பழுதடைந்து நிற்னறாக பயணிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
அத்துடன் இவ்வாறான தூர பிரதேசத்துக்கு நல்ல நிலையில் உள்ள பேருந்தை விடாமல் மிகவும் பழுதான பேருந்து சேவையில் ஈடுபடுவதாகவும் கிழக்குக்கான இ.போ.ச.பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக நாளாந்தம் பயணம் செய்யும் பயணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் மக்களின் கொரிக்கை கவனத்தில் கொள்ளப்பட்ட நிலையில் இன்று புதிய பேருந்து குறித்த வழிப் போக்குவரத்துக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|