மக்களது அடிப்படைத் தேவையான குடிநீரை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் !

Friday, May 20th, 2016

குடாநாட்டில் குடிநீர் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  குடிநீரை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை துரிதமாக ஏற்படுத்திக்கொடுப்பதுடன் அவற்றை மக்கள் விரைவாக பெற்றுக்கொள்ளக்கூடிய ஒழுங்குகளையும் மேற்கொண்டுகொடுக்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஈழமக்கள் ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சின் நீர்வள சபையின் வடக்கு மகாண அலுவலகம், யாழ். பிரதான வீதியில் நேற்று (19) திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வின் பின்னர் யாழ் மாவட்ட செயலகத்தில் குடாநாட்டின் நீர் நிலைமைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பாக நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜிதமுனி சொய்சா தலைமையில்ஆராயப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சார்பில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை வலியுறுத்தினார்.

இதன்போது விவசாயத்துக்கு தேவையான நிதிவளம் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் பெற்று தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு தேவை’ என அமைச்சர் காமினி விஜித் விஜிதமுனி சொய்சா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் அரச அதிபர் பிரதேச செயலர்கள் குடாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

1

20160519_171746

Related posts:

உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அல...
விசாரணைகள் முழுமையடையாததால், பதவியில் இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது குற்றப்பத...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனுக்கள் ஜனவரி 18 இல் பரிசீலனைக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மாணவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கட்டுப்படுத்த பொலிஸாரின் வீதியோர கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்...
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன களமிறக்கும் வேட்பாளரே வெற்றியடைவார் - முன்னாள் ஜனாதிபத...