பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் இல்லாமற் போகும்.

Sunday, May 7th, 2017

தற்போதைய அரசியலமைப்பின் 9 வது பிரிவில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை மாற்றுவதற்காக அரசியலமைப்பு ஏற்பாட்டுச் சபையின் நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கைகளில் 7 மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வாதெரிவித்துள்ளார்.

மேற்படி 7 மாற்றுயோசனைகளுக்கு ஊடாக ஏனைய மதங்களை பௌத்த மதத்திற்கு சமாந்தரநிலையில் கொண்டுவரக்கூடிய ஏற்பாடுகள் தென்படுவதாக தெரிவித்துள்ள அவர், பௌத்தமதத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதாக அரசமகாநாயக்க தேரர்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதி இதனால் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: