போதை பொருள் பாவனையே வறுமை அதிகரிப்பதற்கு காரணம் – ஜனாதிபதி!

Thursday, October 10th, 2019

கிராம புறங்களில் வறுமை அதிகரிப்பதற்கு காரணம் போதை பொருள் பாவனையே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதை பொருள் பாவனைக்கு எதிராக அரசாங்கம் ஒரு விரிவான திட்டத்தை நடைமுறைப்படுத்த இதுவே முக்கிய காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சிறந்த ஒரு நாட்டை கட்டியெழுப்ப போதை பொருள் பாவனையில் இருந்து கிராமங்கள் விடுப்பட வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அபிவிருத்தி கண்ட படுகஸ்வெவெ ஆசிரிகம கிராம சக்தி கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts: