போதைப்பொருள் பயன்பாட்டால் குற்றச் செயல்கள் அதிகரிப்பு – பொலிஸ் மா அதிபர்!

Thursday, January 17th, 2019

நாட்டில் அதிக போதைப்பொருள் பயன்பாடு காரணமாக குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்து குற்றச் செயல்களுக்கும் காரணம் போதைப் பொருள் பயன்பாடு தான் என்றும் தெரிவித்த அவர் 2018ஆம் ஆண்டில் மாத்திரம் 737 கிலோவுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள், 40,000 கிலோவுக்கும் அதிக கஞ்சா, 1000 கிலோவுக்கும் அதிக கொகெய்ன் போதைப்பொருள் மற்றும் 13 கிலோவுக்கும் அதிக ஹெசிஸ் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

நாட்டில் இருக்கின்ற கலாச்சாரம் மதம் அழிவடைவதற்கும் காரணம் போதைப்பொருள் பயன்பாடு என்று பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: