போக்குவரத்து துறை தனியார்மயமாகாது – அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா!

Wednesday, March 15th, 2017

இலங்கைப் போக்குவரத்துத்துறை எந்த வகையிலும் தனியார் மயப்படுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

ரெயில்வே திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

தொழிற்சங்கமும் பல்வேறு குழுக்களும் தமது நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் உண்மைக்குப் புறம்பான செய்திகளில் பொதுமக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து வலுவான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு பொதுமக்கள் ஆணை வழங்கினர். அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்காக இந்த ஆணை வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்துத் துறைகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக தற்போதைய அரசாங்கம் இத்துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு பாரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அரசாங்கம் என்ற ரீதியில் எப்பொழுதும் பொதுமக்களின் நலனுக்காகவே செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: