போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை – அமைச்சர் மகிந்த அமரவீர!

Tuesday, December 10th, 2019


கொழும்பு நாரஹன்பிட்டி உள்ளிட்ட நாட்டின் அனைத்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாரஹன்பிட்டியில் உள்ள மோட்டரர் போக்குவரத்து திணைக்களத்துக்கு அமைச்சர் நேற்றையதினம் திடீரென விஜயம் செய்தார் . இதன்போதே அமைச்சர் இந்த ஆலோசனையை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

நாரஹன்பிட்ட பிரதான அலுவலகம் மற்றும் மாவட்ட கிளை அலுவலகங்களுக்கு அருகாமையில் உள்ள இந்த தரகர்களினால் பொதுமக்கள் பெரும் சிரமங்கள் மற்றும்; துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறிவதற்காக தாம் திடீரென திணைக்களத்துக்கு விஜயம் செய்ததாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடுகள் உண்மையானவை என்பதை காணக்கூடியதாக இருந்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தரகர்கள் போலியான முத்திரைகளை பயன்படுத்தி போலியான சான்றிதழ்களை வழங்கி பொதுமக்களிடம் பெருந்தொகையான பணத்தை பெற்று வருவதாகவும் இவ்வாறானவர்களை உடனடியாக கைது செய்வதற்கு சம்பந்தப்பட்ட பிரிவினரிடம் முறைப்பாடுளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Related posts: