போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் வரையறைகளுடன் மீண்டும் ஆரம்பம்!

Saturday, October 17th, 2020

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்  வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் சில வரையறைகளுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் தனது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமத்தைக் குறைக்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களைப் பதிவு செய்தல், சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகித்தல், வாகன இலக்கத் தகடுகளை விநியோகித்தல் மற்றும் வாகனப் பரிசோதனை ஆகிய சேவைகள் ஒக்டோபர் 20 காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை தினசரி முன்பதிவு ஊடாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிப்பு அதிகமுள்ள பிரதேச மக்கள் ஆபத்து நீங்கும் வரை திணைக்களத்துக்கு வருவதைத் தவிர்க்குமாறும் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்கவென அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளைக் கைக்கொள்ளுமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வெரஹெர அலுவலகத்தினால் வழங்கப்படும், சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஒருநாள் சேவை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: