பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

Monday, May 23rd, 2016

இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் துணைப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி மக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அந்த நிவாரணப் பொருட்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் ஊடாக விநியோகம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணப் பொருட்களை வழங்குதென்றால் நேரடியாக மக்களுக்கு வழங்காது, விநியோக நிலையங்களுக்கு வழங்குமாறு கோரியுள்ளார். களனி கங்கையின் நீர்மட்டம் ஓரளவு குறைந்துள்ள போதிலும் மக்களின் சுகாதாரம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் சொந்த இடங்களில் குடியேறக்கூடிய சூழ்நிலை உருவாகவில்லை.

நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்தல் அல்லது பெற்றுக் கொள்ளுதல் தொடர்பிலான அனைத்து விதமான விசாரணைகளுக்கும் 117, 13612, 1361 மற்றும் 136 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு குறித்து மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Related posts: