பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை நியமித்தார் ஜனாதிபதி!

Thursday, June 8th, 2023

பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் குழுவில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களின் ஏகமானதான தீர்மானத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவர் பதவி 5 மாதங்களுக்கும் மேலாக வெற்றிடமாக உள்ளது. இதுவரை, குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்காலிக தலைவர்கள் குழுவின் பணியை வழிநடத்தினர்.

சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஹர்ஷ டி சில்வாவுக்குத் தலைவர் பதவியை வழங்குமாறு சபாநாயகரிடம் தொடர்ச்சியாக வலியறுத்திய போதும் அவருக்கு அப்பதவி கிடைக்கவில்லை.

நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரங்களை மேற்பார்வையிடும் பணி இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழு, மிக முக்கியமான குழுக்களில் ஒன்றாக கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: