பொதுமன்னிப்பு காலத்தில் 404 துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

Saturday, May 7th, 2016

சட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்காக பொதுமன்னிப்பு காலத்தினுள், 404 துப்பாக்கிகள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தள்ளார்.

பொதுமன்னிப்பு காலமானது நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள இராணுவ ஊடகப் பேச்சாளர்.கம்பஹா மாவட்டத்தில் 100 துப்பாக்கிகளும், கொழும்பில் 44 துப்பாக்கிகளும், மன்னாரில் 36 துப்பாக்கிகளும், புத்தளம் மாவட்டத்தில் 24 துப்பாக்கிகளும் மற்றும் இரத்தினபுரியில் 21 துப்பாக்கிகளும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி முதல் இம்மாதம் 6 ஆம் திகதிவரை பொதுமன்னிப்பு காலம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: